காவல்துறையினர் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தனது சேமிப்பிலிருந்து ரூ.1.5 லட்சம் பணம் கொடுத்து உதவிய சிறுமி!

சென்னை, காட்டுபாக்கம் பகுதியில் வசித்து வரும் சிறுமி ஶ்ரீஹிதா சில வாரங்களுக்கு முன்னர் ராயப்பேட்டையிலுள்ள தனது தந்தை சத்யநாராயணாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு காவல்துறையினர் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து கலந்தாய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது இதனைக் கண்ட சிறுமி ஶ்ரீஹிதா தனது சேமிப்பிலிருந்து சிசிடிவி கேமரா பொருத்த பணம் தருவதாக கூறினார். சில நாட்களில் மேற்படி சிறுமி ஶ்ரீஹிதா தனது தந்தையுடன் சென்று காவல் அதிகாரிகளை சந்தித்து, தனது சேமிப்பு பணத்திலிருந்து ரூ.1,50,000/- பணத்தை கொடுத்தார்.

மேற்படி சிறுமியின் செயலை கேள்விப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன்,  சிறுமி ஶ்ரீஹிதாவை நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

-எஸ்.திவ்யா.

திருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள் விடுதி தின விழாவில் நடிகர் டில்லி கணேஷ் உரையாற்றினார்!
மக்களவை பொதுத்தேர்தல்!-திமுக சார்பில் விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேர்காணல்.

One Response

  1. MANIMARAN March 10, 2019 8:06 am

Leave a Reply