விபத்தில் காயமடைந்த தேசிய பறவை (மயில்) வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது!

வனத்துறை அதிகாரியிடம் மயில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட திருச்சி – கல்லணை சாலையில், காவிரி தென்கரையில் உள்ள ஆற்று படுகை மற்றும் சாலையோரங்களில் நூற்றுக்கணக்கான மயில்கள் (தேசிய பறவை) சுற்றித்திரிகின்றன. 

இவற்றிற்கு போதிய இரை (ஆகாரம்) கிடைக்காததால், இரைத் தேடி  சாலையை கடந்து தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் மேய்ந்து வருகின்றன. இதனால் சில நேரங்களில் வாகனங்களில் அடிப்பட்டும், நாய் போன்றவற்றால் கடிப்பட்டும் காயமடைகின்றன.

மேலும், மதுபோதையில் சுற்றித்திரியும் நபர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கியெரியும் பீடி மற்றும் சிகரெட் துண்டுகளால் இங்கு உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி  தீ பற்றிக் கொள்கிறது. இதனால் ஏராளமான வன உயிரினங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இந்த பிரச்சனைகளை சம்மந்தப்பட்ட வனத்துறையினர் கண்டுகொள்வதே இல்லை.

இந்நிலையில் இன்று மாலை திருச்சி மாவட்டம், கீழமுல்லக்குடி ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஒட்டக்குடி – புத்தாபுரம் கிராமத்திற்கு அருகில் விபத்தில் காயமடைந்த  தேசிய பறவை (மயில்) ஒன்றை, அப்பகுதியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற இளைஞர் காப்பாற்றி, அவரது வீட்டில் பராமரித்ததுடன்,  திருச்சி மாவட்ட வன அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இராமச்சந்திரன் வீட்டிற்கு வந்த வனத்துறை அதிகாரியிடம், அந்த தேசிய பறவையை அவர் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

எனவே, அப்பகுதியை வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அப்பகுதியில் நடமாடும் மயில், குரங்கு மற்றும் அரிய வகை வன உயிரினங்களை பாதுகாப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • -டாக்டர்.துரைபெஞ்சமின்.
  • Ex. Honorary Animal Welfare Officer,
  • Animal Welfare Board of India
  • E-mail: ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN March 7, 2019 11:23 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply