ஏற்காட்டில் இன்று காலை மிதமான மழை! 

rain

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் கடந்த 23 தேதி முதல் 25 தேதி வரையில் ஏற்காடு மலைப்பாதையை ஒட்டிய வனப்பகுதி, மலைடியவார வனப்பகுதி மற்றும் ஏற்காட்டில் உள்ள சில இடங்களில் காட்டுத் தீ அதிகளவில் பற்றி எரிந்தது, அதுமட்டுமின்றி ஆங்காங்கே காட்டுத் தீ எரிந்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை முதலே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. காலை 8:05 முதல் 9:10 மணி வரை மிதமான மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து காற்றில் அதிகளவிலான ஈரத்தன்மை இருந்தது. இதனால் இன்று மதியம் வரை ஏற்காட்டில் குளிர்ச்சி நிலவியது. மதியத்திற்கு மேல் வெயில் மீண்டும் சுட்டெரிக்க துவங்கியது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் வனப்பகுதியில் கிடந்த சறுகுகள், காய்ந்த இலைகள் சற்று நனைந்தன. காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மழையை ரசித்துக்கொண்டே நனைந்தபடி சென்றனர்.

-நவீன் குமார்.

Leave a Reply