இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்!- இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி இந்திய விமானியை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கொக்கரிபபு!

கைது செய்யப்பட்ட இந்திய விமானியின் படத்தையும் பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்டுள்ளது.

உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தீவிரவாதிகளின் கூடாரமாக திகழும் பாகிஸ்தான், இந்தியாவிடம் தற்போது தன்சுயரூபத்தை காட்டத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் முகாம்கள் மீது, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி இன்று நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை நமது  இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதில் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் இருந்த விமானி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஒரு வீடியோவையும், கைது செய்யப்பட்ட இந்திய விமானியின் படத்தையும் பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எது எப்படியோ! போர்களத்தில் ஒப்பாரியைப் பொருட்படுத்தக் கூடாது. பாகிஸ்தானின் கொட்டத்தை முழுமையாக அடக்கும்வரை இந்தியாவின் முப்படைகளும் ஓயவே கூடாது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கியது செல்லும்; தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானது!- டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை அதிகாலை நேரத்தில் அதிரடி தாக்குதல்! -இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

Leave a Reply