கரூரில் நடைபெற்ற புதிய அரசியல் கட்சித் தொடக்க விழாவில் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார்!

வீர மங்கேஷ்கர் என்பவர் தலைமையில் இயங்கி வந்த அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் தற்போது “வீரத்தமிழர் மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த அரசியல் கட்சியின் தொடக்க விழா கரூர் வி.எம்.சி மாஹாலில் இன்று (21.02.2019) மாலை நடைபெற்றது. இவ்விழாவில் செல்வி.மேகவர்ஷினி வரவேற்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டினன், மே 17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, உள்ளாட்சித்தகவல் தமிழ் இணைய ஊடகத்தின் ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் டாக்டர். துரை பெஞ்சமின், புதிய பாரதம் கட்சியின் மாநில செயலாளர் வி.என்.சுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

-ஆர்.சிராசுதீன்.

அரசு பேருந்து ஓட்டுநர் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மனைவி பலி! -மகள் உயிர் ஊசல்.
இலங்கை கடற்படையினரால் 13 இந்திய மீனவர்கள் கைது!

Leave a Reply