“வீரத்தமிழர் மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சித் தொடக்க விழா கரூரில் நடைபெற இருக்கிறது!

வீர மங்கேஷ்கர் என்பவர் தலைமையில் இயங்கி வந்த அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் சங்கம்,  உறுப்பினர்கள் வேண்டுகோளால் “வீரத்தமிழர் மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த அரசியல் கட்சி தொடக்க விழா கரூர் வி.எம்.சி மாஹாலில் (21.02.2019) அன்று மாலை 03.00 மணியளவில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் செல்வி.மேகவர்ஷினி வரவேற்புரை வழங்குகிறார்.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டினன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் உ.தனியரசு, மே 17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர் வ.கௌதமன், பகுஜன் கிளர்ச்சி இயக்கத்தின் மாநில தலைவர் டி.கே.ராமஜெயம், ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத்தலைவர் ஆ.நாகராசன், தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் யு.கே.மணிமாறன், சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச்செயலாளர் ப.குணசேகரன், சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.அண்ணாதுரை, தலித் விடுதலை இயக்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் தலித் பாண்டியன், தமிழக ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் த.சத்தியமூர்த்தி, குருப் ஆப் ஒயிட்கிராஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் கே.ஏ.ஜான்பாஸ்கர், உள்ளாட்சித்தகவல் தமிழ் இணைய ஊடகத்தின் ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் டாக்டர். துரை பெஞ்சமின், புதிய பாரதம் கட்சியின் மாநில செயலாளர் வி.என்.சுந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைமை செயர்குழு உறுப்பினர் இல.அகரமுத்து, மக்கள் உரிமைகள் இயக்கத்தின் மாநில செயலாளர் சி.நாகராஜன் மற்றும் சமூக செயல்பாட்டாளர் பெ.வேம்பரசு ஆகியோர்  இவ்விழாவில் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள், நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க இருக்கின்றனர். கலாநிதி பாண்டியன் நன்றியுரை வழங்குகிறார்.

கலைத்தாய் சிலம்பம் அகாடமி சார்பில் கலை நிகழ்ச்சி, சமூக விழிப்புணர்வு பாடல் மற்றும் இசைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

– கே.பி.சுகுமார்.

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
உலகத் தாய்மொழி நாள்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து.

Leave a Reply