தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 5 மாத கை குழந்தை மாயம்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், வள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் ராமசந்திரன் – சத்தியா தம்பதியரின் லத்திகா  என்ற 5 மாத பெண் குழந்தை, நேற்று இரவு வீட்டில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த போது, யாரோ குழந்தையை தூக்கி சென்று  விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதினர் அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்களிடம் குழந்தை மாயமானது குறித்து விசாரித்துள்ளனர். குழந்தை கிடைக்காததால், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் வீட்டில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஆர்.சிராசுதீன்.   

தமிழ்நாடு அரசின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை! முழு விபரம்.
இலங்கை சபாநாயகருடன் கடற்படைத் தளபதி சந்திப்பு!

Leave a Reply