திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழகத்திலேயே மிக உயரமான கொடிக்கம்பம் நடுவதற்கு முன்னாள் மாணவர்கள் திட்டம்!

திருச்சி தேசியக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான ஆண்டுக் கூட்டம் இன்று (03-02-2019) காலை 10.00 மணியளவில் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது.

தேசியக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரும், தினமலர் திருச்சி பதிப்பின் ஆசிரியருமான முனைவர். ராமசுப்பு தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளரும், அம்மன் முறுக்கு கம்பிகள் நிறுவனத்தின் மேலான்மை இயக்குனருமான மா.சோமசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார்.

தேசியக் கல்லூரியின் செயலாளர். கா.ரகுநாதன் சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான விருதினை இந்தியாவுக்கான தென் சூடானின் தூதர், சா. தட்சினாமுர்த்தி (IFS), கிருஷ்ணன் ராமசாமி, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, ரா. மாதவன், புது தில்லி விமான  நிலைய செயல் இயக்குனர், மா. ஜெயக்கண்ணன், ஆகியோருக்கு வழங்கி கௌரவித்து, கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

சிறந்த மாணவர்களுக்கான விருது பெற்ற நால்வரும் பரிசினை ஏற்றுக்கொண்டு ஏற்புரையாற்றி, கல்லூரிக்கு நன்றி பாராட்டி, தங்கள் நினைவுகளை பகர்ந்து கொண்டனர்.

கல்லூரியின் இயக்குனர். முனைவர். கு.அன்பரசு, தேசியக் கல்லூரி கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தேசிய அளவில் கல்வித்தரத்தோடு எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்று, முன்னாள் மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார். தேசியக் கல்லூரியின் முதல்வர். முனைவர். ரா. சுந்ததரராமன் நன்றியுரை ஆற்றினார். முனைவர். பேரா. சா. நீலகண்டன் நிகழ்ச்சியை தொகுத்துரைத்தார்.

நூற்றான்டு விழாவினை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் தங்கள் நினைவுகளை வீடியோவில் பதிவு செய்தனர்.

மேலும், தமிழகத்திலேயே மிக உயரமான கொடிக்கம்பம் தேசியக்கல்லூயில் நடுவதற்க்கு ஏற்பாடு செய்வற்க்காக சுமார் 6 லட்சம் வரை நிதி கொடை வசூலாகியது. விழாவிற்கு வந்திருந்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு நிதி கொடை தருவதாக உறுதியளித்தனர்.

இவ்விழாவில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களின் துறை, கல்லூரி வகுப்பறை மற்றும் தங்களின் பேராசிரியர்கள் ஆகியோருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டனர்.

நிறைவாக, தங்களின் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு அங்கிருந்து பிரியாவிடை பெற்றனர்.

-ஆர்.மார்ஷல்.

 

 

Leave a Reply