ஏற்காடு மலைப்பாதையில் விபத்துக்களை தவிர்க்க குவிலென்ஸ்கள் பொருத்த வேண்டும்:  சுற்றுலா பயணிகள் கோரிக்கை.

சேலம் மாவட்டம், ஏற்காடு, தமிழகத்தில் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இங்கு விடுமுறை தினம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஏற்காட்டிற்கு சேலத்தில் இருந்து கொண்டப்பநாய்க்கன்பட்டி வழியாக ஒரு மலைப்பாதையும், குப்பனூர் வழியாக ஒரு மலைப்பாதையும் உள்ளன. இதில் கொண்டப்பநாய்க்கன்பட்டி வழி பாதையே பெரும்பாலோனோர் பயன்படுத்தும் பாதையாக உள்ளது.

இந்த 20 கிலோ மீட்டர் நீள மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகளும், பல சாதாரண வளைவுகளும் உள்ளன. இந்த கொண்டை ஊசி வளைவுகளில் எதிர்திசையில் இருந்து வரும் வண்டிகளை அறிந்துக்கொள்வதில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் இருந்து வந்தது.

இந்நிலையில், ஏற்காட்டை சேர்ந்த சில தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கொண்டை ஊசி வளைவுகளில் மட்டும் இலவசமாக குவிலென்ஸ்களை பொருத்தினர். இதனால் எதிர்திசையில் வரும் வாகனங்களை வாகன ஓட்டிகள் பார்க்க முடிந்தது. விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைந்தன.

ஏற்காடு மலைப்பாதையில் சேதமடைந்து இருக்கும் குவிலென்ஸ்கள்.

தற்போது. அங்கு பொருத்தப்பட்ட குவிலென்ஸ்களில் சில சேதமடைந்தும், முழு லென்ஸ்ம் இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்துள்ள குவிலென்ஸ்கள் உள்ள பகுதியிலும், ஆபத்தான வளைவுகளிலும் குவிலென்ஸை பொருத்த வேண்டும் என, சுற்றுலா பயணிகளும் மற்றும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நவீன்குமார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்!-உத்தரவின் உண்மை நகல்.
நோய்வாய்ப்பட்டு நடுகடலில் படகில் தத்தளித்த மீனவரை காப்பாற்றி கரைச்சேர்த்த இலங்கைக் கடற்படையினர்!

Leave a Reply