திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா!

மிகவும் பழமை வாய்ந்த திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் முதல் நாள் பூச்சொரிதல் விழா தேர்பவனியுடன் இன்று மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

 

இக்கோவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் மலைக்கோட்டையின் கீழ் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு “கோட்டை மாரியம்மனாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.

-அழகு ராஜா.

Leave a Reply