சூரியூரில் நடைபெற இருக்கும் ஜல்லிகட்டு விழாவிற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி நேரில் ஆய்வு செய்தார்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், சூரியூரில் ஜனவரி 16–ந்தேதி நடைபெற இருக்கும் ஜல்லிகட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

முன்னேற்பாடு பணியில் உள்ள குறைபாடுகள் குறித்தும், மேலும், ஜல்லிகட்டு நடைபெறும்போது ஏற்படும் நடைமுறை பிரச்சனைகள் குறித்தும், அதனை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும், அரசு அதிகாரிகளுக்கும், ஜல்லிகட்டு குழுவினருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி ஆலோசனை வழங்கினார்.

அப்போது திருச்சி கோட்டாட்சியர் ஒ.அன்பழகன், திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை, திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட  பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!- மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள சிக்கிம் மாநில முதலமைச்சர்.
இலங்கை கடற்பகுதியில் 20 இந்திய மீனவர்கள் கைது!

Leave a Reply