பிருந்தாவன் வித்யாலயா  சர்வதேச (BVIS) பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திருச்சி – கல்லணை சாலையில் அமைந்துள்ள பிருந்தாவன் வித்யாலயா சர்வதேச (BVIS) பள்ளியில் இன்று மாலை பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் விழா நடைபெறுவதை முன்னிட்டு மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து இன்று பள்ளிக்கு வந்திருந்தனர். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிருந்தாவன் வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஆர்.சாத்தப்பன், பள்ளியின் தாளாளர் சா.சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிறைவாக மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் பொங்கல் வழங்கப்பட்டது.

– கே.பி.சுகுமார்.

ஜாபர் சேட் உள்பட 6 ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் கட்டிடக்கலைத்துறை சார்பில் 3 நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது.

Leave a Reply