மாமியாரை அரிவாளால் வெட்டிவிட்டு மரத்தில் தூக்குப்போட்டு தொங்கிய மருமகள்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கிருஷ்ணசமுத்திரம் கிராமம், மேலதெருவில் வசித்து வந்த சின்னபொண்ணு, வயது 60, க.பெ. மாவடியான் (லேட்) என்பவருக்கும், அவரது மருமகள் ஈஸ்வரி, வயது 45, க.பெ. மகாதேவன் (லேட்) என்பவருக்கும் இடையே நேற்று இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆத்திரமடைந்த மருமகள் ஈஸ்வரி,  மாமியார் சின்னபொண்ணுவை அரிவாளால் வெட்டியதில் தலையின் இடது புறத்திலும், இடது கை விரலிலும் காயமடைந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துவாக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் மாமியாரை வெட்டிய மருமகள் ஈஸ்வரியை தேடியதில், நேற்று இரவு 11.30 மணியளவில் கிருஷ்ணசமுத்திரம் அருகே உள்ள வயல்காட்டில் மரத்தில் அவரது சேலையிலேயே தூக்குப்போட்டு தொங்கியுள்ளார்.

மேற்படி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலிசார், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈஸ்வரியின் கணவர் 3 வருடங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார் இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் வெட்டுப்பட்ட மாமியாரும், தற்கொலை செய்து கொண்ட மருமகளும், ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய் தகராறில் தொடங்கிய மாமியார், மருமகள் குடும்பப் பிரச்சனை, உயிர் பலியில் முடிந்துள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

 

 

 

 

திருவாரூரில் போட்டியிட அதிமுகவினர் ஏராளமானோர் விருப்ப மனு!- வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும்.
ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

Leave a Reply