ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்!

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய பகுதியில் ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட தங்க நகை அடங்கிய கைப்பையை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறையினரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை, வேளச்சேரி பகுதியிலுள்ள வங்கியில் பணிபுரிந்து வரும் M.பாண்டி அருணா என்பவர் 26.12.2018 அன்று மாலை பணி முடித்து தண்டையார்பேட்டையிலிருந்து ஆட்டோவில் ஏறி கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்றபோது 2 ½ சவரன் நகை, பணம் ரூ.2,000/- மற்றும் அடையாள அட்டைகள் அடங்கிய கைப்பையை வந்த ஆட்டோவில் மறந்து விட்டது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஆட்டோவின் பின்புற இருக்கையில் தங்கநகை மற்றும் பணம் அடங்கிய கைப்பை இருந்ததை எடுத்து புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி சம்பவத்தில் உடனடியாக புலன் விசாரணை செய்த B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் G.பிரபாகரன், தலைமைக் காவலர் P.சதிஷ்குமார் (த.கா.35542) மற்றும் காவலர் D.வினோத்குமார் (கா.எண்.31479) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர். அ.கா.விசுவநாதன் 27.12.2018 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

-ஆர்.அனுசுயா.

 

Leave a Reply