நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பு சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடிதம்.

நடிகர் கமல்ஹாசன்.

நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பு சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோதிக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

2015ம் ஆண்டில் ஆள் கடத்தலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்தது. ஆண்டுதோறும் இது தொடர் கதையாகிறது. பெண்கள், குழந்தைகளே அதிகம் கடத்தப்படுகிறார்கள். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆனபோதும் இத்தகு கொடுமைகள் தொடர்வது வெட்ககேடானது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

ஆச்சர்யம் ஆனால் உண்மை!-கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய காவல் ஆய்வாளர்.
ஏழைகள் சொந்த வீட்டில் வாழ வேண்டும்!-ஆந்திர மாநிலத்தில் என்.டி.ஆர். வீடமைப்புத் திட்டம்.

Leave a Reply