மேகதாது குறுக்கே புதிய அணை கட்ட முயற்சி! தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை (06.12.2018) மாலை 4 மணிக்கு நடைபெறும்.

File Photo.

கர்நாடக அரசு மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட முயற்சி செய்துவருவது தொடர்பாக, விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை (06.12.2018) மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் ஆளுங்கட்சி எதிர்கட்சி மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் செயல்பாட்டை கண்டித்தும் மற்றும் புதிய அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினம்!-அதிமுக-வினர் மலர் அஞ்சலி..!
கஜா புயலில் வீட்டை இழந்த 450 குடும்பங்களுக்கு தார்பாய் மற்றும் கொசு வலை வழங்கிய திருச்சி தேசிய தொழில்நுட்ப மாணவர்கள்!

Leave a Reply