பணி நேரத்தில் போலீசார் மொபைல் போன் பயன்படுத்த தடை! -டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவு.

டி.ஜி.பி., ராஜேந்திரன்.

தமிழ்நாட்டில் பணி நேரத்தில் போலீசார் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்பு பணியின் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் பணிக்கு குந்தகம் ஏற்படுகிறது. பணி நேரத்தில் காவலர்கள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு மேல் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்தலாம்.

சட்டம் -ஒழுங்கு தொடர்பான பணி, வி.வி.ஐ.பிக்கான பாதுகாப்பு, கோயில் திருவிழாக்கள் ஆகிய இடங்களில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பாக அனைத்து காவலர்களுக்கும். உயர் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்று, அந்த உத்தரவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply