அசைவ பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!-நாடு முழுவதும் நாய் இறைச்சி வினியோகம்…!- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நாய் இறைச்சி!

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நாய் இறைச்சி.

அசைவ பிரியர்களின் விருப்பத்திற்கு ஈடுக்கொடுக்கும் வகையில், வகை வகையான ஊர் பெயர்களில், நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் அசைவ உணவகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் பிரியாணி ஹோட்டல்கள் பெருமளவில் பெருகி இருக்கிறது. 

விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஹோட்டல்களை தவிர, பெரும்பாலும் ஆட்டு இறைச்சியில், மாட்டு இறைச்சியை கலந்து விற்பனை செய்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்தாலும், சமீப காலமாக பிரியாணி ஹோட்டல்களில் நாய் இறைச்சி கலப்படம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் இன்று பறிமுதல் செய்யப்பட்ட நாய் இறைச்சி, பிரியாணி பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நாய் இறைச்சி.

ஆம், ஜோத்பூர்- மன்னார்க்குடி இடையே ஓடக்கூடிய விரைவு இரயில் இன்று காலை சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அப்போது, அந்த இரயிலில் வந்த பார்சல்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். மாட்டிறைச்சி என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த பார்சல்களைப் பிரித்துப் பார்த்தபோது, மாட்டிறைச்சியுடன், 1,000 கிலோ அளவுக்கு நாய் இறைச்சியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இது ஏதோ இன்று மட்டும் நடந்த சம்பவமாக தெரியவில்லை. இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைப்பெற்று வந்துள்ளது. இதற்கு பின்னால் சங்கலி தொடர் போல மிகப் பெரிய வர்த்தக கும்பல் இருக்குமென்று தெரிகிறது.

ரயிலில் வந்த பார்சலிலே இந்த லட்சணம் என்றால், லாரி, வேன் மற்றும் தனியார் வாகனங்களில் எவ்வளவு கலப்பட பொருட்கள் வரும் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதைக்கிறது.

அசைவ உணவகங்களுக்கு வாங்கப்படும் இறைச்சிகள் அனைத்தும், எங்கு யாரிடம் வாங்கப்படுகிறது? (அல்லது) எங்கிருந்து விநியோகம் செய்யப்படுகிறது? என்ற விபரத்தை  சேகரித்து, அவற்றின் தரத்தையும், நம்பக தன்மையையும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உணவகங்களுக்கு வரும் மக்கள் நிம்மதியடைவார்கள்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply