சேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி நகர் முல்லைத்தெரு குடியிருப்பு மக்கள்!

இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் இன்று (16.11.2018) மதியம் 2.30 மணியளவில் எடுக்கபட்டது.

திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட 7- வது வார்டு சஞ்சீவி நகர் பகுதியில் முல்லைத்தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள வடிகால் பகுதிகள் அனைத்தையும் தனிநபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாலும், முல்லைத்தெரு தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தார் சாலை அமைக்காததாலும், அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக கிடக்கிறது. நடந்தோ (அல்லது) இருசக்கர வாகனங்களிலோ செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் தண்ணீர் நிரந்தரமாக தேங்கி நிற்பதால், கொசுக்களின் தொல்லையும், பாம்பு மற்றும் விஷ சந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

இதுக்குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் சார்பாக பல முறை எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இப்பகுதியில் உள்ள வடிகால் ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி, முல்லைத்தெரு தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தார் சாலை அமைத்து கொடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு கிடைக்கும்.

சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply