கர்நாடக மாநில இடைத்தேர்தலில் முதலமைச்சரின் மனைவியும், முன்னாள் முதலமைச்சரின் மகனும் அமோக வெற்றி!-அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் முழு விபரம்.

கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசுவாமியின் மனைவி அனிதா.

கர்நாடக மாநிலத்தில் ராம் நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இன்று (06.11.2018) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் கட்சியும், ராம் நகர் சட்டப்பேரவை தொகுதியை மத சார்பற்ற ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளது. ராம் நகர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட, கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசுவாமியின் மனைவி அனிதா, 125043 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

பெல்லாரி மக்களவை தொகுதியை காங்கிரஸ் கட்சியும், மாண்டியா மக்களவை தொகுதியை மத சார்பற்ற ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளது.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா.

ஷிமோகா மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா 543306 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

ராம் நகர் சட்டப்பேரவை தொகுதியை மத சார்பற்ற ஜனதா தளம் கைப்பற்றியது!-அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் முழு விபரம்.

கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசுவாமியின் மனைவி அனிதா.

ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது!-அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் முழு விபரம்.

பெல்லாரி மக்களவை தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது! -அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் முழு விபரம்.

மாண்டியா மக்களவை தொகுதியை மத சார்பற்ற ஜனதா தளம் கைப்பற்றியது! -அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் முழு விபரம்.

 

ஷிமோகா மக்களவை தொகுதியை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது! -அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் முழு விபரம்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

இந்தியாவை எம்மை விட்டு தூரமாக்குவதற்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் ரணில் விக்ரமசிங்ஹ செயற்பட்டார்!-இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்க குற்றச்சாட்டு.
கர்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஆண் மருத்துவ உதவியாளர்!-ஆபத்திற்கு பாவமில்லை.

Leave a Reply