கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமி பெற்றோருக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள தலவாய்பட்டி பகுதியில், ராஜலட்சுமி என்ற 13 வயது சிறுமியை, அதே பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார் என்பவன் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கழுத்தறுத்து படுகொலை செய்தான். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிறுமி ராஜலட்சுமியை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான், இதுபோன்ற குற்ற சம்பவங்களை குறைக்க முடியும் என்றார்.

-கா.ரவிவர்மன்.

 

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற குற்றவாளியை கைது செய்ய உதவிய பெண்!
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம்!

Leave a Reply