திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் சார்பில், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை முதலாமாண்டு சமூக பணித்துறை மாணவர்கள் சார்பில், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் அரியாவூர் கிராமத்திலும் மற்றும் ஹெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள TELC சிறுவர்கள் இல்லத்திலும் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சுதா மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை உதவி பேராசிரியர் முனைவர் கிப்ட்ஸன் ஆகியோர் கலந்துக்கொண்டு மனித உரிமைகள் குறித்து கிராம மக்களுக்கு விரிவாக ஆலோசனை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிற்கான ஏற்பாடுகளை, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை முதலாமாண்டு சமூக பணித்துறை மாணவர்கள் ரதீஸ், பிரியதர்ஷன், பிரீத்தி, வீணா, மோனிஷா, ஆக்னஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

-ஆர்.மார்ஷல்.

துபாய் கல்வி நிறுவனங்களுக்கு முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தேவை!
திருச்சியில் SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு!

Leave a Reply