திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் சார்பில், மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை முதலாமாண்டு சமூக பணித்துறை மாணவர்கள் சார்பில், மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு, திருச்சி செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைப்பெற்றது.

இக்கருத்தரங்கில் மருத்துவர்கள் வட்சலா, மெர்லின்டோரா, சபரிநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்தும் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரிவாக ஆலோசனைகள் வழங்கினார்கள்.

இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை முதலாமாண்டு சமூக பணித்துறை மாணவர்கள் அகிலா, ஜாக்சின் கோமஸ், குமுதா, நிவின்சேவியர், சூர்யா, யுவயாழினி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

-ஆர்.மார்ஷல்.

திருவெறும்பூரில் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது !
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடக்கும் அட்டூழியங்கள்...!- வீடியோ ஆதாரம்.

Leave a Reply