பாரத மிகுமின் (BHEL) நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாரத மிகுமின் (BHEL) நிறுவனத்தின் வெல்டர் தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கும் விதத்தில் ஈடுப்படும் BHEL நிர்வாகத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் BHEL மெயின் கேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது.

திருவெறும்பூர் அருகே உள்ள BHEL நிறுவனத்தில் வெல்டர் சங்கம் உள்ளது. அந்த சங்கத்தில் 970 தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். என்ற கோரிகையை வலியுறுத்தி கடந்த 2-ம் தேதி முதல் ஒட்டு மொத்த விடுப்பெடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அவர்களை BHEL நிறுவனம் அழைத்து பேசாமல், அவர்களில் தலைவர்- செயலாளர் உட்பட 9 பேரை பணியிடை நீக்கம் செய்தும், மேலும், 14 பேரை வடமாநிலங்களில் உள்ள பெல் நிறுவனங்களுக்கு மாற்றம் செய்தும் அனுப்பி உள்ளனர்.

BHEL நிறுவனத்தின் இந்த தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து, BHEL அனைத்து தொழிற்சங்கம் சார்பில் BHEL மெயின்கேட் முன்பு  BHEL நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு BHEL தொழிற்சங்க கூட்டுகுழு ஒருங்கிணைப்பாளரும் BHEL தொ.மு.ச துணைதலைவருமான செந்தில்குமார் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 9 தொழிலாளர்களை மீண்டும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். மேலும், பணிமாறுதல் செய்யபட்ட 14 பேரின் பணி மாறுதல்களை ரத்து செய்யவேண்டும். வெல்டர் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, பேச்சுவார்த்தை மூலம் BHEL நிர்வாகம் தீர்வு காணவேண்டும்

மேலும் நிரந்தரப்பணியாளர்கள் செய்யவேண்டிய பணிகளை அப்ரண்டிஸ் மாணவர்களை வைத்து செய்ய கூடாது, மேலும், வெல்டர் போராட்டங்களை நீர்த்து போக செய்யும் வகையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில பணி நிரந்தரம் செய்யகூடாது. உள்ளிட்ட கோரிகையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏடிபி தொழிற்சங்க நிர்வாகி கார்த்திக், அம்பேத்கார் யூனியன் நிர்வாகி ஜெகதீசன், பிஎம்எஸ் நிர்வாகி சங்கர், ஐஎன்டியூசி கல்யாணகுமார், தி.க.அசோக்குமார், பின்எஸ்யு பாஸ்கர், சிஐடியு பிரபு உட்பட 11 தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply