கிணற்றின் சுற்று சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது!

சேலம் மாவட்டம், ஏற்காடு, வெள்ளக்கடை கிராமத்தில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் சுற்று சுவர் சேதமடைந்து காணப்பட்டது. மக்கள் இந்த கிணற்றில் இருந்து பொது மக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு இந்த கிணற்றின் சுற்று சுவர் முழுவதும் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் பெரிதும் கவலையடைந்து உள்ளனர்.முறையாக பராமரிக்கப்படாததே இந்த நிலமைக்கு காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

எனவே, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த கிணற்றை சரிசெய்வார்களா?

-நவீன்குமார்.

நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட 35 பேர் மீது வழக்கு பதிவு! கைதுக்கும் - விடுதலைக்கும் காரணம் என்ன?-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.
மணல் கடத்தலில் ஈடுப்பட்ட ஆம்னி வேன் பறிமுதல்!- திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை அதிரடி நடவடிக்கை.

Leave a Reply