மணல் கடத்தலில் ஈடுப்பட்ட ஆம்னி வேன் பறிமுதல்!- திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை அதிரடி நடவடிக்கை.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கீழமுல்லக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டக்குடி பகுதியில், காவிரி ஆற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் எடுத்து, அதை கரையில் கொண்டு வந்து கொட்டி, சாக்கு மூட்டைகளில் கட்டி, அங்கிருந்து ஆம்னி வேன் மூலம் கடத்தி வந்த போது, திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை தலைமையிலான வருவாய்துறை பணியாளர்கள் வேனை வழி மறித்து அதிரடியாக சோதனையிட்டபோது, அதில் 25 மூட்டைகளில் மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மணல் மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்துள்ளனர்.

-ஆர்.சிராசுதீன்.

கிணற்றின் சுற்று சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது!
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, கேரள அரசு அமல்படுத்தும்:கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி!-வீடியோ.

Leave a Reply