மனைவியின் கழுத்தை துண்டித்த மனித மிருகம்!-திருவெறும்பூர் அருகே தெற்கு காட்டூரில் நடந்த பயங்கரம்.

கணவனால் கொலை செய்யப்பட்ட ஜெசிந்தா ஜோஸ்பின்.

மனைவியின் கழுத்தை துண்டித்த மனித மிருகம் சங்கர் சகாயராஜ்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தெற்கு காட்டூர், பிலோமினாள்புரம் முதல்தெருவை சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ்(வயது30), இவர் எல்.ஐ.சி ஏஜென்டாக வேலை செய்து வருகிறார்.

சங்கர் சகாயராஜ்க்கும், தஞ்சை மாவட்டம், கீழ திருப்பந்துருத்தியை சேர்ந்த ஜெசிந்தா ஜோஸ்பின் (வயது26) என்பவருக்கும், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது.

இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடும், வாக்கு வாதமும், வம்பு, சண்டையும் எற்பட்டு வந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த ஜெசிந்தா ஜோஸ்பின் கோபித்துக் கொண்டு, தனது தாய் வீடான திருப்பந்துருத்தி கிராமத்திற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (5-ம்தேதி) சங்கர் சகாயராஜ், தனது மாமியார் வீட்டிற்கு சென்று, தனது மனைவி ஜெசிந்தா ஜோஸ்பினை சமாதனப்படுத்தி, தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், 6-ம் தேதி இரவு சங்கர் சகாயராஜீக்கும், ஜெசிந்தா ஜோஸ்பினுக்கும் இடையே மறுபடியும் தகறாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சங்கர் சகாயராஜ், தன் மனைவி என்றும் பாராமல் ஜெசிந்தா ஜோஸ்பின் தலையை அரிவாளால் வெட்டி தனியாக துண்டித்துள்ளான். பின்னர் ஜெசிந்தா ஜோஸ்பினோடு அன்று இரவு படுத்து உறங்கி உள்ளான்.

இந்நிலையில், இன்று காலை சங்கர் சகாயராஜின் பெற்றோர் தனிஸ்லாசு, சகாயமேரி ஆகியோர், மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளனர். அப்போது சங்கர் சகாயராஜ் ரத்த கறையோடு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளான்.

இதைப் பார்த்த தனிஸ்லாசும், சகாயமேரியும் என்வென்று கேட்டுகொண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது ஜெசிந்தா ஜோஸ்பின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், பிணமாக படுக்கையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்குள் இச்சம்பவம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்தது. அதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்தும், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதோடு, சங்கர் சகாயராஜை கைது செய்தனர்.

மேலும், காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கத்திடம் புகார் பெற்று, திருவெறும்பூர் போலீசார் ஜெசிந்தா ஜோஸ்பின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோனைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் திருமணம் ஆகி 9 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளதால், இதுகுறித்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் விசாரனை நடைப்பெற்று வருகிறது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply