விபத்தில்லா பயணம்! – திருவெறும்பூர் வட்டார காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.

திருச்சி, சமயபுரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். இதுப்போன்ற விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு தமிழக காவல்துறை சார்பில் தமிழக முழுவதும் விபத்தில்லா பயணம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் காவல் சரகத்தில் இன்று நடைப்பெற்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு, திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) புகழேந்தி தலைமை வகித்தார்.

பாய்லர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம், திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானவேலன், நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமரன், துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளர் அழகம்மாள், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர்கள் லெட்சுமணன், புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்கவேண்டும்.

வாகன ஓட்டிகள் குடித்துவிட்டும், செல்போன் பேசிகொண்டும், வாகன ஓட்டகூடாது.

வாகன ஓட்டிகள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

வாகனங்கள் கட்டுப்பாட்டோடு இருக்கவேண்டும்.

சாலை ஓரம் வாகனங்களை நிறுத்த கூடாது. அப்படி வாகனங்களை நிறுத்தினால் இன்டிகேட்டர் லைட் போடவேண்டும்.

வாகனங்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். 

ஓட்டுனர்கள் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

கேரளாவில் 98 சதவீதம் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் லைசன்ஸ் மற்றும் உரிய ஆவணங்கள் வைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் 30 சதவீதம் பேர் மட்டுமே அனைத்து ஆவணங்கள் வைத்துள்ளனர். இந்நிலை முற்றிலும் மாறவேண்டும்.

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்லகூடாது.

இவ்வாறு இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply