கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை!

அரக்கு சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வரா ராவ் .

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து, தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறிய அரக்கு சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வரா ராவ் மாவோயிஸ்ட்டுகளால் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டிணத்தில் இருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை கிராமமான துதாங்கி கிராமம் அருகே சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வரா ராவ் இன்று காரில் வந்த போது மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வரா ராவ் கொல்லப்பட்டார். உடன் சென்ற உதவியாளரும் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.

இந்த கொலைக்காண காரணம் இதுவரை தெரிவில்லை.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

நடிகை நிலானியை வாழவிடுங்கள்: மருத்துவர் ஜெமிலா ஆதங்கம்!-வீடியோ.
மணப்பாறையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்ததானம் செய்த மதுரை மாநகர காவல்துறைனர்!

Leave a Reply