மணப்பாறையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்ததானம் செய்த மதுரை மாநகர காவல்துறைனர்!

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

சமூக சேவகி மற்றும் மதுரை இரத்ததானம் செய்வோர் ஒருங்கிணைப்பாளர்கள் அமைப்பின் (BOOM) நிர்வாகி N.ஷர்மிளா, கடந்த 13.09.2018-ம் தேதி அன்று, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம், திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த கவிதா என்பவருக்கு சிக்கலான மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக அவசரமாக அரியவகை O-VE – 5 யூனிட் இரத்தம் பல இடங்களில் கேட்டும் கிடைக்காததால், அதற்கு உண்டான ஏற்பாடுகளை தாங்கள் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில், மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் உடனடியாக மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து, O-VE வகை இரத்தம் உடைய காவலர்கள் பற்றிய விபரங்களை அறிந்து, 5 காவல் அதிகாரிகள் மற்றும் போலிசாரை 2 மணி நேரத்திற்குள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி அவர்களை 5 யூனிட் இரத்தம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் கர்ப்பிணி பெண் கவிதா உரிய மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, 15.09.2018 ம் தேதி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

கவிதாவின் உறவினர்கள் அனைவரும் உரிய நேரத்தில் இரத்ததானம் செய்ய தக்க ஏற்பாடு செய்துகொடுத்து, விலைமதிப்பற்ற இரு உயிர்களை காப்பற்றியதற்காக மதுரை மாநகர காவல் ஆணையருக்கும் மற்றும் மதுரை மாநகர காவல்துறைக்கும், தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை!
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றவாளியை, துரத்தி பிடித்த போலிசாருக்கு, சென்னை காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.  

Leave a Reply