கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றவாளியை, துரத்தி பிடித்த போலிசாருக்கு, சென்னை காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.  

சென்னை எண்ணூர் அருகே நள்ளிரவில் கண்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றவாளியை, துரத்திச் சென்று பிடித்த போக்குவரத்து ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் வள்ளாளன் மற்றும் முதல்நிலைக் காவலர் சார்லஸ் (எண்.28579) ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விமல்ராஜ், வ/24, த/பெ.ரட்சகன் என்பவர் TN28 P 0130 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்திற்கு, 19.09.2018 அன்று நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு (20.09.2018 அதிகாலை) எண்ணூர் விரைவு சாலையில் நின்றிருந்தபோது, TN05 BQ 4773 என்ற பதிவெண் கொண்ட Honda Activa இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் விமல்ராஜிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

விமல்ராஜ் பணம் தர மறுக்கவே, இருவரும் சேர்ந்து விமல்ராஜ் சட்டைப்பையில் வைத்திருந்த பணம் ரூ.200/-ஐ அபகரித்துக் கொண்டு தப்பினர். உடனே, விமல்ராஜ் சத்தம்போடவே, அவ்வழியே ரோந்து சென்ற M-5, எண்ணூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் அந்நபர்களை விரட்டிச்சென்று பிடித்து, விசாரித்ததில் பிடிபட்ட நபர் விக்கி (எ) தீபக், வ/19, த/பெ.கிருஷ்ணன், எண்.9/63, சாஸ்திரி நகர், விம்கோ நகர், எண்ணூர் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விக்கி (எ) தீபக் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். 

மேற்படி சம்பவத்தில் குற்றவாளியை பிடித்த M-5, எண்ணூர் போக்குவரத்து காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் வள்ளாளன் மற்றும் முதல்நிலைக் காவலர் சார்லஸ் (எண்.28579) ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply