கரை ஒதுங்கிய 9000 கிலோ எடை கொண்ட திமிங்கல சுறா மீனை, கடலின் ஆழமான பகுதியில் கொண்டு சென்று விட்ட இலங்கை கடற்படையினர்!

இலங்கை, முல்லைத்தீவு கடற்தொழில் ஆய்வாளர் மோகன் குமாரவை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், முல்லைத்தீவில் உள்ள அலம்பில் பீச் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 9000 கிலோ எடையும், 9 மீட்டர் நீளமும் கொண்ட திமிங்கல சுறா மீனை, இலங்கை கடற்படையினர் 3 கடல் மைல்கள் தூரம் கொண்டு சென்று கடலின் ஆழமான பகுதியில் விட்டனர்.

இந்த உயிரினம் திமிங்கல குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய உயிரினங்களில் ஒன்றாகும். இவை 70 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இது அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இதை வேட்டையாடுவதோ, விற்பனை செய்வதோ (அல்லது) காட்சிப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும்.

-என்.வசந்த ராகவன்.

கடல் மார்க்கமாக கஞ்சா கடத்திய 3 பேர் கைது!
கப்பலில் காயமடைந்த மாலுமியை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

Leave a Reply