அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரௌடி நாகராஜ் கைது! -வீடியோ.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜ், இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது ஜாமீனில் வெளியில் வந்த இவர், வாட்ஸ் ஆப் மூலம் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவுக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

மேலும், சிறைத்துறை டிஐஜி பழனி குறித்து ஏகவசனத்தில் பேசியிருக்கும் ரௌடி புல்லட் நாகராஜ், எப்போதும் ஜெயலில் இருக்க முடியாது என்றும், கேட்டை விட்டு வெளியில் வந்தது தான் ஆக வேண்டும் என்றும் மிரட்டி இருந்தார். இவர்கள் தவிர, சிறைத்துறை பெண் மருத்துவருக்கும் ரௌடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று பகிரங்கமாக சுற்றி திரிந்த புல்லட் நாகராஜனை போலீசார் அதிரடியாக விரட்டி பிடித்து கைது செய்தனர்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

தமிழக சுகாதார அமைச்சர் Dr.விஜயபாஸ்கர் பற்றி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ.
உடலில் பலத்த காயங்களுடன் அழுகிய நிலையில் வாய்க்காலில் மிதந்த மினி வேன் டிரைவர்!- திருச்சி நவல்பட்டு போலீசார் விசாரணை.

Leave a Reply