உடலில் பலத்த காயங்களுடன் அழுகிய நிலையில் வாய்க்காலில் மிதந்த மினி வேன் டிரைவர்!- திருச்சி நவல்பட்டு போலீசார் விசாரணை.

மினி வேன் டிரைவர் இளங்கோவன்.

திருச்சி, நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயன்புதூர் அருகில் உள்ள வாய்க்காலில், அழுகிய நிலையில் மிதந்த மாத்தூரை சேர்ந்த மினி வேன் டிரைவர் இளங்கோவனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் இளங்கோவன் வேலை பார்த்த கடையின் உரிமையாளரான மாத்தூர் அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக் ஏற்கனவே அயன்புதூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்து ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

-ஆர்.சிராசுதீன்.

அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரௌடி நாகராஜ் கைது! -வீடியோ.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக மின்சார சர்க்யூட் பலகையை திருச்சி என்.ஐ. டி. வழங்கியது.

Leave a Reply