அமெரிக்காவில் வேட்டி சட்டையில் வலம் வரும் இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு!

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் இலினொய் மாநிலத்தில் அமைந்திருக்கும் சிகாகோ மாநகரில் பல முக்கிய அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது இந்திய மற்றும் அமெரிக்க தூதர்கள் உடனிருந்தனர்.

சிகாகோ மாநகரம் வணிகம், தொழில், கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்கும் முக்கிய இடமாகும். இதனால் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று சிகாகோ வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராகமும் விளங்குகிறது. சிகாகோ மாநகரை ஒட்டியுள்ள பெரும் புறநகர் பகுதி “சிகாகோ நிலப்பரப்பு” என்றே அழைக்கப்படுகிறது. இப்புறநகர் பகுதியில் சுமார் 9.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியின் கரையில் சிகாகோ அமைந்துள்ளது. உலகின் பெரிய 25 மாநகர்களில் சிகாகோவும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படி வரலாற்று சிறப்பு மிக்க சிகாகோ மாநகரில் தன்னை வரவேற்க மற்றும் தன்னை சந்திக்க வந்திருந்த அனைவரும் கோட் – சூட் அணிந்து கம்பீரமாக கெத்து காட்டி வலம் வந்த போது, நமது இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மட்டும், நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் மிக எளிமையாக அமைதியாக காட்சியளித்தார்.

இதைக் கண்ட அமெரிக்க அமைச்சக அதிகாரிகள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

மேலும், விவேகானந்தர் நினைவிடத்திற்கு சென்று வழிப்பட்டார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக மின்சார சர்க்யூட் பலகையை திருச்சி என்.ஐ. டி. வழங்கியது.
தமிழக அரசுக்கு எதிராக செப்டம்பர் 18 -ஆம் தேதி தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- முழு விபரம்.

Leave a Reply