ஆசிய விளையாட்டு போட்டியில் ‘வெள்ளிப்பதக்கம்’ வென்று சொந்த ஊருக்கு திரும்பியுள்ள ஆரோக்கிய ராஜீவ்க்கு திருச்சி இரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.

ஆசிய விளையாட்டு போட்டி கலப்பு குழு தொடர் ஓட்டப் போட்டியில் ‘வெள்ளிப்பதக்கம்’ வென்று தாயகம் திரும்பியுள்ள தமிழகத்தை சேர்ந்த வீரர் ஆரோக்கிய ராஜீவ்க்கு, தற்போது (இரவு 11 மணி) திருச்சி இரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் மாலை அணிவித்து, ஆராத்தி எடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஆரோக்கிய ராஜீவ், திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்துள்ள வழுதியூரை சேர்ந்த ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

-துரை திரவியம்.

Leave a Reply