ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இந்தியாவிற்கு 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெங்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் ‘ஆசியாட்’  என்றும் அழைக்கப்படுகின்றன.

சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றறது. முதல் ஆசிய விளையாட்டில் பதினோரு நாடுகள் பங்கு கொண்டன.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியா நாட்டின் இஞ்சியோன் நகரில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 04 வரை நடைபெற்றன.

தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 18 -ந்தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டி செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைப்பெறும்.

தற்போது இந்தோனேசியாவில் நடைப்பெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை இந்தியாவிற்கு 3 தங்கப் பதக்கமும், 3 வெள்ளிப் பதக்கமும், 2 வெங்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது.

பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்திலும், ஜப்பான் இரண்டாவது இடத்திலும், கொரியா மூன்றாவது இடத்திலும், இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும்: தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி பக்ரீத் திருநாள் வாழ்த்து.
கடலில் சிக்கி தவித்த 11 மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

Leave a Reply