காவிரியில் வெள்ளப்பெருக்கு..!-திருச்சி பனையக்குறிச்சி அருகே கால்வாய் மதகில் தண்ணீர் கசிவு!- முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் திருவெறும்பூர் வட்டாட்சியர்.

தண்ணீர் கசியும் மதகு அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது

இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் இன்று (16.08.2018) மாலை 7.11 மணிக்கு எடுக்கப்பட்டது.

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், காவிரி கரையோரமுள்ள மாவட்டங்களுக்கு, மத்திய நீர்வளத்துறை ஆணையம் மீண்டும் இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 50 மீட்டர் தூரத்தில், காவிரியின் வலது கரையில் கல்லணைச் செல்லும் சாலையில், பனையக்குறிச்சி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில், காவிரி ஆற்றில் உள்ள கால்வாய் மதகில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு பனையக்குறிச்சி வாய்க்கால் உடைந்து தாழ்வான பகுதியில் இருந்த 2 வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை, அவரது ஜீப் ஓட்டுநருடன் இணைந்து, பனையக்குறிச்சி கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன், தண்ணீர் சூழ்ந்த இரண்டு வீடுகளுக்குள் இருந்த பொருட்களைப் பத்திரமாக மீட்டு, மேடான பகுதிக்கு கொண்டு வரும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரையின் பணி உண்மையிலுமே பாராட்டத்தக்கது.

முக்கிய குறிப்பு:

கீழமுல்லக்குடி படித்துறைக்கு கிழக்கே 200 மீட்டர் தூரத்தில் ஒரு இடத்தில் காவிரி கரைப் பலகீனமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply