கொள்ளிடம் ஆற்றில் விரிசல் ஏற்பட்ட தூண் சரிந்து விழுந்தால், பாலம் சேதமடையும் அபாயம்!

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், திருச்சி மேலணையில் (முக்கொம்பு) இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலத்தில் உள்ள தூணில் நேற்று மாலை திடீரென விரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் பாலத்தை கடந்து செல்லாத வகையில் கண்காணித்து வருகின்றனர்.

இன்று கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், விரிசல் ஏற்பட்ட தூண் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் திருச்சி கொள்ளிடம் பாலம் சேதமடையும் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

-கே.பி.சுகுமார்.

காவிரியில் வெள்ளப்பெருக்கு..!-திருச்சி பனையக்குறிச்சி அருகே கால்வாய் மதகில் தண்ணீர் கசிவு!- முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் திருவெறும்பூர் வட்டாட்சியர்.
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!- மத்திய நீர்வள ஆணையம் அறிவிப்பு

Leave a Reply