திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடலுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி!

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும், மூத்த பத்திரிகையாளருமான கலைஞர் மு.கருணாநிதி உடலுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோதி ஆறுதல் கூறினார்.

பிரதமருடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சௌந்தராஜன் ஆகியோர் உடன் வந்தனர்.

சென்னை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

-எஸ்.திவ்யா.

பெருங்கதை முடிந்தது; சிறுகதைகள் தேம்புகிறது !- கலைஞர் மு.கருணாநிதியின் இறப்பு சான்றிதழின் உண்மை நகல்.
ஒரே ஒருமுறை ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா? -மு.க.ஸ்டாலின் உருக்கம்.

Leave a Reply