குறுவை நெற்பயிரின் செயல்பாடுகளையும், சம்பா பருவ முன்னேற்பாடுகளையும், கூடுதல் வேணாண்மை இயக்குநர் விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள பொய்கைகுடி பகுதியில் இயந்திரம் மூலம் சாகுபடி செய்யப்பட்டள்ள குறுவை நெற்பயிரின் செயல்பாடுகளையும், சம்பா பருவ முன்னேற்பாடுகள் குறித்தும், சென்னை கூடுதல் வேணாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

மத்திய, மாநில அரசுகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், திருவெறும்பூர், லால்குடி, புள்ளம்பாடி, முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய காவிரிநீர் பாயும் 6 ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை மானிய விலையில் வழங்குகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதிக்கு இயந்திரம் மூலம் 80 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. அதில் 55 ஏக்கர் இயந்திரம் மூலம் திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் பொய்கைகுடி பகுதியில் குறுவை நடவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அதனை சென்னை கூடுதல் வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) விஜயகுமார், திருச்சி வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ், துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பெரியகருப்பன், மாநில திட்டம் ராஜேஷ்குமார், வேளாண் உழவன் பயிற்சி துணை இயக்குநர் ரவி ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும், அவர்கள் விவசாயிகளிடம் அரசு இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு மானியமாக வழங்கும் ரூ.4 ஆயிரம் கிடைக்கிறதா? சிங்சல்பெட் மானிய விலையில் கிடைக்கிறதா? என்பதை கேட்டறிந்தார். பின்னர் கோனவிடார் கருவி மூலம் இயந்திர நடவில் உள்ள களைகளை நீக்கும் பணியை பார்வையிட்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply