பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்.

மது போதையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர்.பிரியாணி கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி, மிருகத்தனமாக நடந்துக்கொண்ட திமுக நிர்வாகிகள் யுவராஜ் மற்றும் திவாகர் ஆகிய இருவரும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விருகம்பாக்கத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற ஆர்.ஆர்.பிரியாணி கடைக்கு இன்று நேரில் சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தி.மு.கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் ஒரு சிலரின் இதுபோன்ற செயல்களால், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பு வீணாவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். பொதுமக்கள் மத்தியில் கழகத்திற்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் விதத்தில் செயல்படுபவர்கள் கட்சியில் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினின் இந்த அணுகுமுறை, தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும், வன்முறையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள் யுவராஜ் மற்றும் திவாகர் ஆகிய இருவரையும் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கினால் மக்கள் நிச்சயம் நிம்மதியடைவார்கள். திமுக தலைமை மீதும் மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN August 8, 2018 1:42 pm

Leave a Reply