அதிகாரிகளின் அலட்சியத்தால், காவிரி ஆற்றில் காட்டாமணி செடி மற்றும் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றாதக் காரணத்தால், திருச்சி முதல் கல்லணை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றின் வலது கரையில் பொதுமக்கள் இறங்க முடியாத நிலை!

இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள மேற்காணும் படங்கள் அனைத்தும் இன்று (22,ஜூலை) மாலை 3.45 மணியளவில் எடுக்கப்பட்டது!- இடம்: திருச்சி காவிரி பாலம்.

அதிகாரிகளின் அலட்சியத்தால், காவிரி ஆற்றில் உள்ள காட்டாமணி செடிகளையும் மற்றும் சீமைக் கருவேலம் மரங்களையும் அகற்றாதக் காரணத்தால், திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே உள்ள காவிரி பாலம் முதல் கல்லணை வரை, சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, காவிரி ஆற்றின் வலது கரையில் பொதுமக்கள் இறங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ம் தேதி சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்ட போது.

கடந்த 19-ம் தேதி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று (21.07.2018) இரவு கல்லணையை வந்தடைந்து. இன்று (22.07.2018) காலை 11 மணிக்கு கல்லணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று (22.07.2018) காலை 11 மணிக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது.

ஆனால், திருச்சி, ஓயாமரி சுடுகாடு அருகே உள்ள காவிரி பாலம் முதல் கல்லணை வரை, சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றில் உள்ள காட்டாமணி செடிகளையும் மற்றும் சீமைக் கருவேலம் மரங்களையும் அகற்றாதக் காரணத்தால், காவிரி ஆற்றின் வலது கரையில் வசிக்கும் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி குளிக்கவோ, வழிப்படவோ, (அல்லது) கால்நடைகளை குளிப்பாட்டவோ முடியாத ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஒரு வேளை இப்பகுதிகளில் மழையும் பெய்ய தொடங்கினால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அப்போது, மேற்படி காட்டாமணி செடி மற்றும் சீமைக் கருவேலம் மரங்களின் ஆக்கரமிப்பால் காவிரி ஆற்றின் நீரோட்டத்தில் தடை ஏற்படும்.

இதுக்குறித்து கடந்த 5 மாதக் காலமாக தமிழக அரசிற்கும் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், பல முறை நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் சார்பில் தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் உண்மை நகல்.

மணல் அள்ளுவதில்தான் பொதுப் பணித்துறையினர் ஆர்வம் காட்டினார்களே தவிர, காவிரி ஆற்றில் உள்ள நீர்நிலை ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, காவிரி ஆற்றில் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள காட்டாமணி செடிகளையும், சீமைக் கருவேலம் மரங்களையும் மற்றும் நீர்நிலை ஆக்கிரப்புகளையும், உடனடியாக நவீன இயந்திரங்களின் உதவியுடன், போர்கால அடிப்படையில் அகற்றுவதற்கு இப்போதாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply