18 ஆண்டுகள் திருச்சி மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த ஆண்டனி டிவோட்டா, முதுமையின் காரணமாக பதவி விலகினார்!-இப்பொறுப்பை தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கவனிக்க போப் ஆண்டவர் உத்தரவு.

1943-ஆம் ஆண்டு ஜீன் மாதம் 30-ந்தேதி, மேபெல் மற்றும் ஜோசப் டிவோட்டா தம்பதியருக்கு மகனாக பிறந்த ஆண்டனி டிவோட்டா, 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி குரு பட்டம் பெற்றார்.

மைசூர் கல்லூரியில் முதுநிலை சமூகவியல் பட்டம் பெற்ற ஆண்டனி டிவோட்டா, அதன்பின் ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளை கடந்து, 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி திருச்சி மறைமாவட்டத்தின் ஆயராக தன் ஆன்மீக பணியை தொடங்கினார்.

இந்நிலையில், முதுமையின் காரணமாக தான் வகித்து வரும் ஆயர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடத்திற்கு விண்ணப்பித்தார்.

தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ்.

இதனை ஏற்றுக்கொண்ட போப் ஆண்டவர் திருத்தந்தை பிரான்சிசு, இதுவரை ஆண்டனி டிவோட்டா வகித்து வந்த பொறுப்பை, தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கவனிக்க உத்தரவிட்டுள்ளார்.ஆண்டனி டிவோட்டா இப்போது எடுத்த இந்த முடிவை, 5 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால் திருச்சி மறைமாவட்ட வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து இருக்கும். காலம் கடந்தாவது இந்த நல்ல முடிவை எடுத்தாரே! அதற்காக அவரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply