மாணவ, மாணவிகளின் நலன் கருதி நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் சார்பில் குளித்தலையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

மாணவ, மாணவிகளின் நலன் கருதி, நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் சார்பில், கரூர் மாவட்டம், குளித்தலையில் “தலைசிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களா?  பெற்றோர்களா?” என்ற தலைப்பில் திருப்பூர் ஆர்.ஜான் சாமுவேல் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் நேற்று (08.07.2018) மாலை 04.00 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் தலைமை வகித்தார். செல்வி துரைபெஞ்சமின் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், தமிழ் அறிஞர்கள், ஆசிரிய பெருமக்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கின்னஸ் சாதனையாளர் ராஜேஷ் செய்து காட்டிய மேஜிக் மற்றும் பல்குரல் நிகழ்ச்சி மாணவ, மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குளித்தலை காவல் நிலைய போலிசார் பாதுகாப்பு வழங்கி இருந்தனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடக செய்தியாளர் புனிதவேல்ராஜ் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

-கே.பி.சுகுமார்,  ஆர்.சிராசுதீன்.

சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட மினி வேன் மோதியதில், இருசக்ர வாகனத்தில் வந்தவர்களுக்கு பலத்த காயம்!-திருச்சி -கல்லணை சாலையில் ஒட்டக்குடி அருகே நடந்த விபரீதம்.
பூலாங்கடி காலனியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை!- திருச்சி, நவல்பட்டு காவல் நிலைய போலிசார் விசாரணை.

Leave a Reply