சென்னையில் முகாமிட்டுள்ள அமித்ஷா!- தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் விரைவில் மாற்றம்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவரை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.

சென்னை ஈச்சம்பாக்கத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மக்களவை தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாக, விரைவில் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மாற்றம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மாநில தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன் விடுவிக்கப்பட்டு, தேசிய அளவில் அவருக்கு பதவி உயர்வு அளிக்க பாரதிய ஜனதா தலைமை தீர்மானித்து உள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

பூலாங்கடி காலனியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை!- திருச்சி, நவல்பட்டு காவல் நிலைய போலிசார் விசாரணை.
கொழும்பு வியாபார நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

Leave a Reply