டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜலை, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் நேரில் சந்தித்தார்!

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜலுக்கும், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளதாகவும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜலை, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இதற்கு பிறகாவது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து இருவரும் தங்களது கடமைகளை உணர்ந்து ஒற்றுமையாகவும், இணக்கமாகவும், டெல்லியின் வளர்ச்சிக்காகவும், டெல்லி மக்களின் நலனுக்காகவும் செயல்படுவார்களா? (அல்லது) வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக காலத்தை கழிப்பார்களா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரத்தை போலி பில் தயாரித்து வெளி ஆட்களுக்கு விற்பனை செய்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர்!-உள்ளது உள்ளப்படி முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.
திருவாரூர்  பிரசித்திபெற்ற அருள் மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில் தெப்பத்திருவிழா!

Leave a Reply