ஜம்மு – காஷ்மீர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது! மெஹபூபா முப்தி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து.

Jammu and Kashmir CM Mehbooba Mufti.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாஜக ஆதரவுடன் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மெகபூபா முப்தி முதல்வராகவும், துணை முதல்வராக பாஜகவின் நிர்மல் குமார் சிங்கும் பதவி வகித்து வந்தனர்.

இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கான ஆதரவை பாஜக இன்று (19.06.2018) வாபஸ் பெற்றது. இதனால் ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி தலைமையிலான ஆட்சிக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 87 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பேரவையில், ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28, பாஜக-வுக்கு 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க மக்கள் ஜனநாயக கட்சிக்கு 44 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் தேவை. இதனால் அங்கு குழப்பமான அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply