ராகுல் காந்தி வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் கர்நாடக முதலமைச்சர்!-மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ்.

டில்லியில் முகாமிட்டிருக்கும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.

சோனியா காந்தி வழிகாட்டுதலின் பேரில், முன்பு மன்மோகன் சிங் பிரதமராக பணியாற்றியதை போல, தற்போது ராகுல் காந்தி வழிகாட்டுதலின் பேரில், கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி செயல்படுவார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

காங்கிரஸ் தலைமையை பொருத்தவரை வரும் 2019 மக்களவை தேர்தலில் எப்படியாவது வெற்றிப்பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை கைபற்றி விடவேண்டும் என்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறது.

அந்தவகையில், கர்நாடக மாநிலத்தில் எதிர் வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியைவிட, காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது. அதற்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை காங்கிரஸ் தலைமை இப்போதே தயார் செய்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் எதிர் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மட்டும்தான், குமாரசாமி அங்கு முதலமைச்சராக நீடிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு.
தடையை மீறி பிரதமர் நரேந்திர மோதி இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி!-டில்லியில் பதட்டம்.

Leave a Reply