தடையை மீறி பிரதமர் நரேந்திர மோதி இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி!-டில்லியில் பதட்டம்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லி ஆளுநர் அனில் பைஜல் வீட்டில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்திற்கு, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் இன்று அவரது இல்லம் நோக்கி தடையை மீறி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் டில்லி முக்கிய வீதிகளில் குவிக்கப்பட்டனர். பிரதமர் இல்லத்திற்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply